Header Ads



நீலப் பெருஞ் சமரில், தோமஸ் கல்லூரியை வீழ்த்திய றோயல் - வெள்ளை ஆடையுடன் வந்த ஜனாதிபதி (படங்கள்)


கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித  தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. 

கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.


இதேவேளை, கொழும்பு SSC மைதானத்தில் ஜனாதிபதி, இன்று போட்டியை நீண்ட நேரம் கண்டுகளித்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி அணிகளை ஊக்குவித்து, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.


இன்றைய போட்டி நிறைவின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரியின் அணிக்கு  டி.எஸ். சேனநாயக்க  நினைவுக் கேடயம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.


வெற்றி பெற்ற அணியினருக்கும், திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, மைதானத்தில் கூடியிருந்த விளையாட்டு ரசிகர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடவும் மறக்கவில்லை.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

18-03-2023





1 comment:

  1. கொழும்பு ரோயல் கல்லூரி இலங்கையிலும் வௌிநாடுகளிலும் அதி உயர் பதவிகளிலும் செல்வாக்குச் செலுத்தும் பலரை உருவாக்கியிருக்கின்றது. இலங்கை அரசியல், பொருளாதார சமூக மட்டங்களில் உயர்ந்த தரங்களிலும் இருப்பவர்கள் ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்கள் உயரிய நடத்தையையும் பண்பையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பொது மக்கள் கற்றவர்கள், செல்வாக்குச் செலுத்துபவர்கள், சமூக மட்டத்தில் தலைமைவகிப்பவர்களிடம் எதிர்பார்ப்பது பண்மையும் உயரிய நடத்தையையும் தான். அது தவிர அவர்களுடைய கல்வியால் நான் சாதனைபடைக்க வேண்டும் என பொதுவாக யாரும் தீர்மானத்துக்கு வருவதில்லை. இந்த படத்தைப் பார்க்கும் போது ரோயல் கல்லூரி ஜோக்கர்களையும் உருவாக்கியிருக்கின்றதா என்றதொரு ஆச்சரியமான கேள்விகுறியை வாசகர்களிடை யே உருவாக்கி யிருக்கின்றது. உயரிய விழுமியங்களும் சிறந்த பண்பாடுகளும் நல்ல தலைவர்களை உருவாக்கும் என்ற கருத்துக்கு மாற்றமாக ways justifies the means என்பதற்குப் பதிலாக The end justifies the means என்ற கம்யுனிஸக் கோட்பாடு இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த அநியாயங்களையும், களவு ஊழல், மோசடி செய்தும் பதவிக்கு வரமுடியுமென்றால ்அ்துதான் சாதனை என்ற கம்யுனிஸக் கோட்பாடு ரோயல் கல்லூரியின் இந்த காட்சி பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றது. ஆனால் ரோயல் கல்லூரியின் முழு வரலாறும் அப்படியா என்பது எமக்குத் தெரியாது. பொதுமக்களின் எந்த விதமான ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் நாட்டின் தலைவராக வந்து சமூகத்தின் உயர் மட்டத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடும் ஒரு முயற்சியா இது என்பதும் புரியவில்லை. தான் கற்ற கல்லூரி என்பதற்காக அங்கு நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முயன்றால் நாட்டில் காணப்படும் 8000 மேற்பட்ட பாடசாலைகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் சனாதிபதி கலந்து கொள்வாரா? அவ்வாறு செய்யாவிட்டால் அது நியாயமாகுமா என்றெல்லாம் கேள்வி கேட்க நினைக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.