ரங்காவுக்கு விளக்கமறியல்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இன்று -18- இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த பதிவுசெய்யப்படாத வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், ஜே.ஸ்ரீரங்காவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இவர் விட்ட விளையாட்டுகளுக்கு வெகுமதியாக குறைந்தது ஐந்து வருடங்களாவது சிறையில் தள்ள வேண்டும். அது தவிர எந்த பிரதியீடுகளும் செல்லுபடியாகாது.
ReplyDelete