Header Ads



இந்தப் பயணம் மிகவும் நீளமானது, IMF க்கு பாராட்டு, ஜனாதிபதிக்கு நன்றி - அலி சப்ரி


இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதி கடனுதவி கோரிக்கையை சர்வதேச நணாய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இந்த பயணம் மிகவும் நீளமானது எனவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


இந்த கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக அயராது உழைத்த ஜனாதிபதிக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுவதி வழங்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.