Header Ads



முற்றாக அழிந்த கரும்புலி யாலயில் தென்பட்டது, அதிகாரிகள் போட்டுள்ள திட்டம்


யால பூங்காவில் மற்றுமொரு அரிய வகையான கரும்புலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்தப் புலி யால போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருப்பதால் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் முன்னையதைப் போல புலியை வேட்டையாடுபவர்களிடமிருந்தும் பொறிகளிடமிருந்தும் மட்டுமே பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


2020ஆம் ஆண்டில் நல்லதண்ணி பகுதியில் கரும்புலி ஒன்று உயிரிழந்த பின்னர் கரும்புலி இனம் முழுமையாக அழிந்து விட்டதாக கூறப்பட்டது. எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கரும்புலியை பாதுகாக்க துறைசார் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த அரியவகைப் புலியைக் காப்பாற்றி, அதிகளவான சுற்றுலாப் பயணிகளை யால பூங்காவிற்கு வரவழைத்து, அதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மேலும் திறம்பட பங்களிப்பை வழங்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.


No comments

Powered by Blogger.