ஜனாதிபதி ரணிலிடம் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்
மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் சுமையைக் குறைப்பதற்கும், சமூக அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான கொள்கை அடிப்படையிலான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதை உறுதிசெய்வதில் அனைத்து பங்குதாரர்களும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்துகொள்வது அவசியம் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், பணத்தை முறையாக நிர்வாகம் செய்து ஊழலை ஒழிக்கவும், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றவும், நடைமுறை தீர்வுகளின் மூலம் மக்களின் துன்பங்களைக் குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment