Header Ads



தங்க நெற்கதிர் பரிசு பெற்றார் ஜனாதிபதி ரணில்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.


பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் இன்று (02) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்த பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதிக்கு தமது சங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.


விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு "ரன் வீ கரல" (தங்க நெற்கதிர்) என்ற பெயரிலான பரிசும் இங்கு வழங்கப்பட்டது. 


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.03.2023

No comments

Powered by Blogger.