Header Ads



ஸ்கொட்லாந்தின் முதல் முஸ்லிம் பிரதமர் ஹம்ஸா ஹாரூன் யூசுப், தொழுகையுடன் பொறுப்புகளை தொடங்கினார் (படங்கள்)



ஸ்காட்லாந்து நாட்டின் எஸ்என்பி எனப்படும் ஸ்காட்லாந்து நேஷனல் பார்ட்டியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முதல் முஸ்லிம் பிரதமராக அக்கட்சியின் ஹம்ஸா ஹாரூன் யூசுஃப் (வயது 37) கடந்த 28.03.2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அவர் ஸ்காட்லாந்தின் முந்தைய பாராளுமன்ற உறுப்பினரான பஷீர் அஹமதிடம் உதவியாளராக பணிபுரிந்தார், பின் அவரது மரணத்திற்கு பிறகு எஸ்என்பியின் தலைவர் அலக்ஸ் சால்மன்ட் மற்றும் முந்தைய பிரதமரான நிகோலா ஸ்டர்ஜனுக்கும் உதவியாளராக இருந்து 2007ல் பாராளுமன்ற உறுப்பினரானார். தற்போது அந்த கட்சியினரால் பிரதமர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை முஸஃபர் யூசுஃப் மற்றும் தாய் ஷாயிஸ்த்தா பட்டா ஆகிய இருவரும் 1980ல் பாகிஸ்தானை விட்டு ஸ்காட்லாந்தில் குடியேறிவிட்டனர். 1985ல் கிளாஸ்கோவில் பிறந்த ஹம்ஸா , அங்கேயே படித்து வழக்குறைஞர் பட்டம் பெற்றவர்.


ஹம்ஸாவுடைய மனைவி நாதியா ஒரு சைக்கோதெரப்பிஸ்ட் ஆவார் இவர்களுக்கு ஒரு மகள் உண்டு, மற்றொரு மகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். 


நேற்று ஸ்காட்லாந்து பிரதமருக்கான பிரத்யேக மாளிகையான ப்யூட் ஹவுஸில் அவர் குடியேறிய கையோடு தனது குடும்பத்தினருக்கு ரமலான் தராவீஹ் தொழுகை நடத்தி தனது பொறுப்புக்காலத்தை தொடங்கினார். 


ஸ்காட்லாந்து சரித்திரத்தில் வெள்ளையினம் சாராத ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை. அங்கு பாகிஸ்தான் வம்சாவளியினர் பலரும் அரசியல் களங்களில் செயலாற்றிவருகின்றனர்.


Nasrath S Rosy







No comments

Powered by Blogger.