Header Ads



டொலர்களை ரூபாவாக மாற்ற முண்டியடிப்பு - பணமாற்று நிலையங்கள் சுறுசுறுப்பு


அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் அந்நியச் செலாவணி பரிமாற்ற மத்திய நிலையங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததாலேயே இந்நிலையங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன. தம்மிடமுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கு பலர் முனைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியானதையடுத்தே, இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.  


இந்நிலையில், நூறு அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை பரிவர்த்தனை செய்வோருக்கே கொள்வனவு விலை 308 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உண்டியல் மற்றும் களவாக நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவந்தவர்களே இவ்வாறு குறைந்த விலைக்கு டொலரை விற்க முயன்றனர்.


எதிர்காலத்தில் டொலரின் விலை மேலும் குறையலாம் என அஞ்சியே,சிலர் குறைந்த விலைக்கு டொலரை விற்க முனைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த அச்சத்துக்கு கடந்தவாரம் 358.45 சதமாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென, தற்போது குறைந்தமையே காரணமாகும்.


இந்நிலையில், கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே,டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது. பணப்பரிமாற்றம் செய்த பின்னர், ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கடவுச்சீட்டுக்கள் கோரப்பட்டன. மேலும், இதை விடவும் அதிக பெறுமானத்துக்கு டொலரை மாற்றிக் கொள்வதற்கு பலர் வெவ்வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.