Header Ads



சலுகை விலையில் அப்பியாச கொப்பிகளை, சதோசவில் பெற்றுக் கொள்ளுங்கள்


பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச கடைகளில் இருந்து உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாசக் கொப்பிகள் நாடு முழுவதுமுள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.