Header Ads



எங்கே செல்கிறது நாடு..?


இந்தப் படம் நிச்சயமாக மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அந்த மதுபான நிலையத்துக்கு வெளியில் நிற்கும் பெண்கள் மாணவிகளாவர் என்பது உண்மை.


அந்த மாணவிகள் அங்கு ஏன்? சென்றனர் என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. சிலவேளைகளில் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் என சிலர்கூறுகின்றனர். எனினும், பணத்தை மாற்ற ஏனைய கடைகளுக்கு மாணவிகள் செல்வார்களே தவிர, இந்தமாதிரியான இடத்துக்குச் செல்வதற்கு வாய்ப்​பே இல்லையென இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.


இந்தப் படம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடையொன்றுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டது. அந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோதமான மதுபாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறியே, இருபாலாரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது.  


ஆகையால்,  தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களும், மாணவர்கள் தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை, அம்மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


உமாமகேஸ்வரி

No comments

Powered by Blogger.