அமைச்சரவை மாற்றத்துக்கு ஏற்ற நேரம் இது, தகுதியான பலர் தற்போது பதவி இல்லாமல் இருக்கிறார்கள்
கடந்த சில வாரங்களாக அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பல முன்னாள் அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது.
தற்போதைய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், அமைச்சரவை மாற்றத்துக்கு ஏற்ற நேரம் இதுவென்றும் தகுதியான பலர் தற்போது அமைச்சு இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாடு என்ன குட்டிச் சுவராகிய போதிலும் பிரச்சினையில்லை. ''தகுதியான'' வர்களுக்கு அமைச்சர் பதவிகள் இல்லாமை தான் நாட்டிலுள்ள அடி்பபடைப் பிரச்சினை. அந்த பிரச்சினை தான் மேலே உள்ள மந்தி(ரி)க்கும் இருக்கும் பிரச்சினை. இதனைப் பொதுமக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ReplyDelete