Header Ads



இன்று கடன் கிடைக்காவிட்டால் நிலமை விபரீதமாகும், உலகமே வழக்கு தொடரும்


சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து  இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும்  நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

களுத்துறை விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். 

 

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், குறிப்பாக 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகத்திடமிருந்து இலங்கை கடன்பெறத் தொடங்கியதாகத் தெரிவித்த அவர், பணத்தை மீள செலுத்த முடியாத நிலையில் பணம் அச்சிடப்பட்டது என்றார்.


இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது என்றும் ஜனாதிபதியொருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது அரசியல்வாதி ஒருவரோ இதற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.


எனவே, இந்த கடன் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த அவர், அதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் இருந்து 20 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இவர் மஹரகம தொகுதியில் எம்.பியாக இருந்து செய்த அட்டகாசங்களையும் களவு, கப்பங்களையும் அந்த ஊர் மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டு சொத்துக்களைச்சூறையாடி, கொள்ளையடித்துவிட்டு இப்போது அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. அது 1977 ஆண்டிலிருந்து வந்த முன்னேற்றத்தின் படிமுறைகள் எனவும் இனி இரண்டு வாரங்களில் ஐஎம்எப் கடன் கிடைக்காவிட்டால் நாடு வங்கரோத்தாகி, உலகமே எமக்கு எதிராக வழக்குத் தொடரும் என இந்த நாட்டு மக்கள் செய்யாத பாரிய குற்றத்தை இழைத்துவிட்டு பொதுமக்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் சுத்த மடத்தனமாக உளரல்களை வௌியாக்கும் இந்த செக்கு மாடுகளுக்கு எதிராக உடனடியாக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்த வேண்டும். அரச பதவியில் இருந்து கொண்டு பொதுமக்கள் மனம் பாதிப்படையும் வகையில் உளருவதும் அவர்களைப் புண்படுத்துவதும் பாரிய குற்றம் எனவும் அது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதையும் பிரஸ்தாபித்து இவன் போன்ற கழுதைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள், சிவில் நிறுவனங்கள், தொண்டர், மனித உரிமை நிறுவனங்கள் உடனடியாக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். இது போன்ற செக்கு மாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுத்தால் நாட்டின் பிரச்சினைகளின் அரைவாசிக்குத் தீர்வு காணலாம்.

    ReplyDelete

Powered by Blogger.