Header Ads



அதீத மத நம்பிக்கையினால், வைத்தியசாலையில் பொய்கூறிய பெற்றோர் - பிள்ளையை புற்றுநோயக்கு பறிகொடுத்தனர்


பெற்றோரின் அதீத மத நம்பிக்கையால் புற்றுநோய்க்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


அந்த இடத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் கடந்த வருடம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டன.


இந்த நிலையில் பெற்றோர் கோப்பாய் பகுதியிலுள்ள மத வழிபாட்டு இடத்துக்குச் சென்று தமது பிள்ளைக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் போது அங்கிருந்தவர்கள் மருத்துவத்தால் பிள்ளையை குணமாக்க முடியாது எம்மிடம் அழைத்து வாருங்கள் பிரார்த்தனைகள் மூலம் குழந்தையை குணமாக்கலாம் என பெற்றோருக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர். 


இதனை அடுத்து பெற்றோர் தமது பிள்ளையை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து செல்லப் போவதாக யாழ். போதனா மருத்துவமனையில் பொய் கூறிவிட்டு பிள்ளைக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காது மத வழிபாட்டு தலத்துக்கு அழைத்துச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர்.


ஒரு வருட காலத்துக்குப் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுவனுக்கு நோயின் தன்மை தீவிரமாகி வயிறு வீங்கி உணவு உண்ப தைக் குறைத்துள்ளான். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் உயிரிழந்துள்ளான்.

No comments

Powered by Blogger.