Header Ads



அனைத்திலும் தோல்வியடைந்த ரணில், தன்னை ரோயல் கல்லூரி தலைவருடன் ஒப்பிடுவது நியாயமா..?


கிரிக்கெட் தொடரில் ரோயல் கல்லாரி வெற்றியடைந்த போது அந்த அணியின் தலைவர் செய்ததை போன்று தானும் நாட்டுக்கு வெற்றியை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் ரோயல் கல்லூரி தலைவர் சுற்றுப்போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சிறப்பாக விளையாடியவர். ஆனால் ஜனாதிபதி அனைத்திலும் தோல்வியடைந்தவர் என்று எதிர்க்கட்சி சுயாதீன எம்.பியான டிலான் பெரேரா தெரிவித்தார். 

 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற   பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


  ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும் சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளையும் ஆட்சி செய்கின்றார். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அவர் ஆளுநர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஊடாக ஆட்சிபுரிகின்றார். மாற்றத்தை கோரியவர்களுக்கு இறுதியில் கிடைத்தது இதுவே என்றார். TW

1 comment:

  1. ஆம் உங்களுக்கு சனாதிபதிப் பதவியைக் கொடுத்திருந்தால் ரணிலைவிட நன்றாகச் செய்திருப்பீர்கள் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நன்றாகத் தொழில் தேடிக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் உங்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைப் பொறுப்பாக ஒப்படைத்தார்கள். அதிலிருந்து ஜில்மார்ட் ​போட்டு அப்பாவி பொதுமக்களின் கோடான கோடி பணத்தைச் சுரண்டிக் கொண்டு வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்த பாரிய களவு பற்றி பதுளை மாவட்ட மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். உங்களைப் போன்ற கள்ளக்கூட்டத்துக்கு சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என இளைஞர்கள் வாதிடும் போது நீஙகளும் உங்கள் கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் இரகசியம் அனைவருக்கும் தெரியும். வாயைப் பொத்திக் கொண்டு மௌனமாக இருந்தால் செய்த களவுக்கு கடவுள் சரியான தண்டனை வழங்கும் வரை பொதுமக்களின் சாபத்திலிந்தாவது கொஞ்ச காலம் தப்பியிருக்கலாம். ஆனால் கடவுளின் தண்டனையிலிருந்து எந்த வகையிலும் தப்பமுடியாது என்பதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.