பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, எவ்வாறு உதவ முடியும்..? மஹிந்த தலைமையில் ஆராய்வு
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
"பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும், வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் மற்றும் கட்சியை முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக" பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமை வகித்ததுடன் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment