மனங்களையும், செயல்களையும் பார்த்த இஸ்லாம்
படத்தின் வலதுபுறத்தில் இருப்பவர், அமெரிக்காவில் 170 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களைக் கட்டி, இன்னும் பல அறப்பணிகளுக்காக மாபெரும் சேவையாற்றிய உலக குத்துச்சண்டை சாம்பியன் "முஹம்மது அலி கிளே" ஆவார்.
இடதுபுறத்தில் இருப்பவர் பிரபல அழைப்பாளர் மால்கம் எக்ஸ். அமெரிக்க இஸ்லாமிய பிரச்சார போக்குக்கு புத்துயிர் கொடுத்தவர். அவரின் சிந்தனைகளும் மேடைப் பிரச்சாரங்களும் அமெரிக்கா முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இருவரும் அமெரிக்காவில் நிலவிய இன மற்றும் நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களாவர். மேலும் இனங்களையும் நிறங்களையும் பார்க்காது மனங்களையும் செயல்களையும் பார்க்கும் சமத்துவ மார்க்கமாம் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டவர்களாவர்.
அவர்களின் பசிக்கான உணவும், தாகத்துக்கான தண்ணீரும் அதில் மாத்திரமே இருந்தது என்பதாகும்.
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment