ஓமான் முதலீட்டாளர் மீது, இலங்கையில் கொடூரத் தாக்குதல் - பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி (படங்கள்)
ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஓமான் பிரஜை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும், பாதுகாப்பு உத்தியோகத்தர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு ஐந்து பேர் கொண்ட குழுவொன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆரம்பத்தில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளது.
அதன்பின்னர், தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர், அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் நிர்வாகம் பலமுறை துன்புறுத்தப்பட்டதாக தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற ஓமானி ஆடைத் தொடரின் சகோதர நிறுவனமான ஆடைத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஓமானியர் இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த ஆடைத் தொழிற்சாலையின் முதலீட்டாளர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment