இலவச கண்புரை சத்திரசிகிச்சை
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் நன் கொடையாளர்களின் உதவியுடன் இலவச கண்புரை சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது.
இதற்கான நோயாளர்களை தெரிவு செய்யும் மூன்றாவது கண் பரிசோதனை முகாம்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் அனலைதீவு பிரதேச மருத்துவமனை, அம்பன் பிரதேச மருத்துவமனை மற்றும் மருதங்கேணி பிரதேச மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது.
கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் இந்தக் கண் பரிசோதனை முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
Post a Comment