காதலியை அறைந்தவரை கம்பி எண்ண வைத்த நீதவான்
மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார் . எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த யுவதி, காதல் உறவை நிறுத்தியுள்ளார்.
எனினும், அந்த இளைஞன் யுவதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளதுடன், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போதான வழக்கு விசாரணையின் போது எதிராளி சாட்சியமளித்து விட்டு வரும்போது, சந்தேகநபர் நீதவானின் முன்பாக அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதவான் கட்டளையிட்டதுடன், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment