Header Ads



கட்சி மாறுவாரா ஹர்ஷ..? தீவிர முயற்சியில் ரணில்


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவரை வளைத்துப் போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.


ஹர்ஷவை அரசுடன் இணையுமாறு ரணில் பல தடவைகள் பேசிவிட்டார். நிதி அமைச்சு தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.


இப்போது ஹரின், ரணிலின் பணிப்புரைக்கமைய ஹர்ஷவையும் அரசுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் என்று அறிய முடிகின்றது. TW

No comments

Powered by Blogger.