Header Ads



கோட்டாபய வெளியேறியமைக்கு பின்னால் இருந்த குறைபாடுகள், மேலும் பல தகவல்கள் வெளியாகின


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பு குறைபாடுகள் அறிக்கையில் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே இந்த அறிக்கை கடந்த வாரத்தில் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டபோது சில தகவல்கள் கசிந்துள்ளன.


இதன் அடிப்படையில் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, அப்போது பதவியில் இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைகளை உரிய முறையில் செயற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு அறிக்கையில் இருப்பதாக அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியினர் கோரி வருகின்றனர்.


கோட்டாபயவின் வெளியேற்றத்துக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு குறைப்பாடுகள் தொடர்பான ஆணைக்குழுவில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, முன்னாள் இராணுவத்தளபதி தயா ரட்நாயக்க மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.


இந்தக் குழுவின் அறிக்கையின்படி, முன்னதாக கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, மாளிகைக்கு அருகில் சென்று போராட்டம் நடத்தியமை, பாதுகாப்பு குறைப்பாட்டில் முக்கிய சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேநேரம் கோட்டாபய ராஜபக்சவின் மீரிஹன இல்லத்தை சுற்றி ஆர்ப்பாட்டங்கள் நடக்கப்போகின்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிந்திராமை மற்றும் ஒரு பாதுகாப்பு குறைப்பாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


எனினும் தாம் அதனை முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், உரிய இடங்களுக்கு தகவல்களை வழங்கியதாகவும் அரச புலனாய்வு பிரிவின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது.


எனினும் அதற்கான ஆதாரத்தை அது சமர்ப்பிக்கவில்லை என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகின்றது.


இதேவேளை கோட்டாபயவுக்கும் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் மொஹமட் சாலேக்கும் இடையில் தொடர்புகள் இல்லாமல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை மூன்று முன்னாள் தளபதிகள் அடங்கிய ஆணைக்குழு தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை.


இருப்பினும் அண்மையில் இந்திய இல்லத்தில் விருந்தின்போது கோட்டாபய ராஜபக்சவும் சாலேயும் சந்தித்துக்கொண்டபோது தாம் நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர், சாலே தொடர்பு கொள்ளவில்லை என்பதை கோட்டாபய, சாலேயிடம் நேரடியாக தெரிவித்ததாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை அநுராதப்புரத்தில் வசிக்கும் கோட்டாபயவுக்கு ஆலோசனைகளை கூறும் ஞானக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், முன்னாள் மூன்று தளபதிகளின் அறிக்கையில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கழுதையின் தலையில் தலை வெடிக்கும் அளவுக்கு சிறுபான்மை குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் ,இலங்கை முஸ்லிம்கள் பற்றிய கடும் வெறுப்பும் ஆக்ரோசமும் அவனுடைய தலைநிறைய இருந்தது. நிர்வாகம் பற்றியோ, நாடு,நாட்டு மக்கள் பற்றியோ அவருடைய தலையில் ஒரு வீதமாவது இல்லை. அரச பணத்தை சூறையாடி வங்கிக் கணக்கை நிரப்புவதும், ஆட்சி தொடர்பாக ஞானக்காவின் சூனியம் செய்தால் ஆட்சி சரியாக நடைபெறும். ஆட்சி தொடர்பான பிரச்சினைகள் தலைக்கு வந்தால் இரவோ பகலோ அனுராதபுரத்துக்குச் சென்று ஞானக்காவின் பனியாரம் கரைத்த நீரை அருகினால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற காடுகளில் வசிக்கும் கோத்திர மந்திகளின் புத்தி தான் இவனுக்கு இருந்தது. இதற்கிடையில் நாட்டின் பல்வேறு துறைகளும் அவனுக்குப் பெரிய தலையிடி மட்டும்தான். சங்கரில்லாவை விற்ற கோடான கோடி டொலர்களும் இராணுவத் தலைமையகத்தை பத்தரமுல்ல மாற்றி ஹொங்கொங் காரனிடம் பெற்று பதுக்கிவைத்த ​கோடான கோடி டொலர்களையும் எப்படிப் பாதுகாப்பது என்பது மாத்திரம் தான் இவனுடைய மூளையில் இருந்தது. அவற்றை பாதுகாக்க சூனியம் செய்வதும் ஞானக்காவின் முக்கிய பணிகளுள் ஒன்று. இதுபோன்ற ஒரு கோத்திரிக்கனுக்கு ஜனாதிபதிப்பதவியைக் கொடுத்த இந்த நாட்டின் குறிப்பாக 69 இலட்சம் மக்களும் அவனுடைய அடிவருடிகளும் தான் இந்த நாட்டைக்குட்டிச் சுவராக்கி அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அடிப்படைக் காரணம். நிதி வாடையே இல்லாத உலகப் புகழ்பெற்ற கள்ளனுக்கு நிதிஅமைச்சர் பதவியைக் கொடுத்து க.பொ.த. அறிவு இல்லாக ராஜபக்‌ஷ கோத்திரத்தைச் சேர்ந்த அத்தனை அடிவருடிகளுக்கும் அரச உயர் பதவிகளைக் கொடுத்து ்அரச சேவையைும் அழித்தது இந்த கழுதைதான். எனவே இனி நாடு உருப்பட வேண்டுமானால்இந்த கழுதையின் குடும்பத்தை முற்றாக சிறையில் அடைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.