Header Ads



அரச தொழிலுக்கும், பதவி உயர்வுக்கும் காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்


பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள சகல தொழில் வாய்ப்புக்களுக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது அரச விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது, அரச சேவையில் உயர் பதவிகளில் கூட அரச விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் நாசகார மனநிலை கொண்டவர்கள் இருப்பதாகவும், அவர்கள் தந்திரமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதாகவும் கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கை மற்றும் ஓய்வுபெற்ற அரச துறை உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளின் அடிப்படையிலுமே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. 


அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் நாசகார மனநிலை கொண்டவர்கள் அரச சேவையில் இணைவது ஸ்திரமான அரச நிர்வாகத்திற்கு தடையாக இருப்பதால் அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் பரிந்துரையாகும். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தாவிடின் இவ்வாறானவர்களின் நடத்தையினால் எதிர்காலத்தில் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை ஆள முடியாது.


இவ்வாறானவர்களின் தலையீட்டில் நடைபெறும், நாட்டின் பொருளாதாரத்தை தீர்க்கமாக பாதிக்கும் மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைத்தல், தொழிற்சங்க மட்டத்தில் அரச கொள்கைகளுடன் முரண்பாடுகளை உருவாக்குதல் மற்றும் அந்த முக்கியமான கொள்கைகள் மீது தவறான சமூக கருத்துக்களை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளினால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணக்கிட முடியாது என ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதற்கிடையில், அமைச்சரவை அமைச்சர் ஒருவர், நாசகார மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் குழப்பச் செயல்களைத் திட்டமிடுபவர்கள் குறித்துக் கண்டறிய புலனாய்வுப் பிரிவு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதனூடாக, இதன் பின்னர் அரச சேவை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போதும், பதவி உயர்வுகளை வழங்கும்போதும் அந்த நபர்கள் குறித்து பொலிஸ் அறிக்கைகளைப் பெறுவதைக் கட்டாயமாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கும் இந்த விசேட பொலிஸ் அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் இது முழுமையாக இலங்கை அரசின் நன்மைக்காகவே அன்றி வேறு எந்த எதிர்பார்ப்புகளுடன் அல்ல எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.