முடங்கியது நாடு, முஸ்லிம் பிரதேசங்களும் வெறிச்சோடியது, ரயில் இரத்து - அலுவலகங்களும், பாடசாலைகளும் பூட்டு - மக்கள் அவதி
(எஸ்.அஷ்ரப்கான்)
பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று 14 ஆம் திகதி இரவு புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனை அடுத்து புகையிரதத்தில் பயணிப்பதற்காக புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக கல்முனை கல்வி வலயப் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதேவேளை தபால் நிலையம், அரச அலுவலகங்கள் என பெரும்பாலான அலுவலகங்கள் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
Post a Comment