வாபஸ் பெற்றார் முஜிபுர் ரஹ்மான்
உள்ளூராட்சி சபை தேர்தலை நிறுத்துவதில் அரசாங்கம் தலையிடுவதை தடுக்குமாறு கோரி, கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று -14- உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதன்படி மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற அனுமதி அளிக்கப்பட்டது.
முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவில், அரசின் நிதி வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தீர்ப்பு வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
Post a Comment