மரத்தில் ஏறி பிக்கு உண்ணாவிரதம் - அவர் முன்வைத்துள்ள கோரிக்கை
பண்டுவஸ்நுவர தேரர் ஒருவர், தனக்கு விகாரையின் தலைமைப் பொறுப்பை வழங்குமாறு கோரி மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மல்வத்து – அஸ்கிரிய தரப்பினர் விகாராதிபதி தேரர் காலமானதையடுத்து, அவரது சிரேஷ்ட சீடருக்கு விகாராதிபதி பதவியை வழங்கியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பண்டுவஸ்நுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிலாபம்- குருநாகல் பிரதான வீதியிலுள்ள மரத்தில் ஏறி குறித்த தேரர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் செயற்பாடுகள் சரியில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஆலயத்தின் பாதுகாப்புக்காக ஏற்கனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment