Header Ads



ஓரினச் சேர்க்கை குற்றம் என்பதை, ரத்துச்செய்ய நடவடிக்கை எடுப்பேன் - ஜனாதிபதி


ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


மார்ச் 24ஆம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும், ஆனால் கடந்த ஐந்து தசாப்தங்களாக அது செயல்படுத்தப்படவில்லை. அரசாங்கம் அந்த சட்டத்தை அமல்படுத்துவதா அல்லது இல்லையா என்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விவாதித்து வருகிறது, 


மேலும் இந்த தண்டனைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதை நான் அறிவேன் என்று அவர் கூறினார்.

1 comment:

  1. இவருடைய அழிவின் ஆரம்பம் உறுதியாகிவிட்டது. ஒழுக்கவிடயத்தில் கைவைக்கும் இந்த நபர், இலங்கையில் பௌத்த கலாசாரத்துக்கு மட்டுமல்ல, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய விழுமியங்களுக்கு கைவைத்த எந்த ஆட்சியாளரும் அடையாளம் தெரியாதவகையில் அழிந்துமாய்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.