தேர்தலை தாமதப்படுத்த சதி, நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணிக்கும் அரசாங்கம்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவத்த பஃப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட புறக்கணிக்கும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை இப்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த சதி செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தற்போது சட்டமன்றமும் தேர்தலை தாமதப்படுத்தச் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
Post a Comment