Header Ads



பாண் விலை குறையுமா..?


பான், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்போமே தவிர, இன்னும் அதிகரிப்பதற்கான எவ்விதமான தயார் நிலையிலும் தாங்கள் இல்லையென தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ஆகக் குறைந்தது பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரையிலும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.


இதற்காக அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து இருப்பதாகவும், தற்போது முடங்கி கிடக்கின்ற கைத்தொழிலை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமாயின் பான், பணிஸ் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


ஒரு இறாத்தல் பானின் விலை 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையிலும் விற்பனைச் செய்யப்படுகின்றது. சில இடங்களில் 180 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும் தெரிவித்த அவர், இந்த விலை அதிகரிப்பை நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாது உள்ளது.


அதனால், பான்,பணிஸ் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது என்றார். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை பேக்கரி கைத்தொழிலுள்ள பாரிய அழுத்தங்களை கொடுத்துள்ளது. இதனால் இந்தத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பல்​வேறான பிரச்சினைகள் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.