Header Ads



ஒரு நாயின் பாசப் போராட்டம் - இலங்கையில் நெகிழ்ச்சி


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானர் மரணமடைந்த நிலையில், சடலத்தை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை கண்ணீருடன் சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.


குறித்த நாயை வளர்த்து வந்த மூதாட்டி புதன்கிழமை (15) மரணமடைந்துள்ளார்.


மூதாட்டி மரணமடைந்ததை உணந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.


மரணமடைந்த மூதாட்டியின் உடல் அவரது மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் வியாழக்கிழமை (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.


மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.


நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் நாய்  மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


எச்.எம்.எம்.பர்ஸான்


No comments

Powered by Blogger.