Header Ads



களுத்துறை முஸ்லிம் லீக் சம்மேளன ஏற்பாட்டில் தலைமைத்துவ, திறன் விருத்தி செயலமர்வு (படங்கள்)


களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு நேற்றைய தினம் கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவு,ம்  பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இச்செயலமர்வில் ஊக்குவிப்பு மனித வள மேம்பாட்டு பேச்சாளர் அஷ்ஷெய்க் யாஸிர் லாஹிர் நளீமி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் கலாநிதி எம் டி எம் மஹீஸ் மற்றும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜிவதீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதோடு,களுத்தறை மாவட்ட சமூகப் பிரச்சினைகளை அடையளம் கண்டு ஆறு மாதங்களுக்குட்பட்ட நான்கு சமூக குழு ஆய்வு செயற்திட்டமும் (Community Need Assessment) இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டன. 


களுத்துறை மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்கற்கைகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.









1 comment:

  1. மிகச்சிறந்த முன்மாதிரி. இதுபோன்ற செயலமர்வுகள் தொடர்ந்து எல்லா மாகாணங்கள், மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும். இளைஞர்களும் யுவதிகளும் இவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு சமூக, பொருளாதார, அரசியல் மட்டத்தில் எவ்வாறான சீர்திருத்தங்களை முன்வைக்கலாம், அவற்றை நடைமுறைப்படுத்தலாம்,அதன் சவால்கள் என்ன அவற்றை எவ்வாறு எதிர்நோக்குவது போன்ற விடயங்கள் நீண்ட, ஆழமான ஆய்வுகள் செய்து நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யலாம். இந்த செயலமர்வை ஒழுங்கு செய்து அவற்றை வெற்றிகரமாக நடாத்த எல்லாவகையிலும் உதவி ஒத்தாசை வழங்கிய நிறுவனங்கள், தனிநபர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.