"இந்தியாவின் முட்டையை எங்களுக்குத் தாருங்கள்"
- ரஞ்சித் ராஜபக்ஷ -
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மலையகத்தில் உள்ள பேக்கரிகளுக்கு விற்பனை செய்யுமாறு பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியாவில் உள்ள பேக்கரிகளுக்கு, சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பேக்கரி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
நாங்கள் சிறியளவிலேயே பேக்கரி உற்பத்திகளை செய்து வருகின்றோம். அதற்காக நாளொன்றுக்கு 300-500 முட்டைகள் மட்டுமே தேவைப்படுகின்றது.
சந்தையில் தற்போது 55 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கூடிய விலைகளில் முட்டையை கொள்வனவு செய்து, பேக்கரி கைத்தொழிலை முன்னெடுக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இனி இறக்குமதி செய்து சுமார் ஒரு மாதம் கடந்தபின் அந்த இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு நுவரெலியா,மலைநாட்டு பேக்கரிகளுக்குக் கொடுங்கள். அவற்றைக் குறைந்தவிலைக்கு கொள்வனவு செய்து அவற்றால் கேக்கும் கூக்கும் செய்து பொதுமக்களுக்கு விற்கும் அளவுக்கு இந்த நாட்டில் சட்டம் மழுங்கி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார்களா? அவற்றை உண்டு வரும் நோய்களுக்கு யார் பொறுப்பு. இறக்குமதி செய்து கமிசன் அடித்தவர்களா? அல்லது ஆட்சியில் இருக்கும் மற்றவர்களா? யாருக்கு என்னவந்தாலும் பரவாயிலலை. பேக்கரிகளுக்கு அபரிமித இலாபம் மாத்திரம் கிடைத்தால் போதும் என்ற கோட்பாடா? அதற்கு யார் துணைபோகின்றனர்.
ReplyDelete