Header Ads



மஹிந்தவுக்கான தடை நீக்கம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10 நாட்களுக்கு) தற்காலிகமாக நீக்கியுள்ளது.


2023 ஏப்ரல் 20 முதல் 30 வரை வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதாக இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது கட்சிக்காரர் தென்கொரியாவிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்தக் கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

1 comment:

  1. களவாடியும் கொள்ளையடித்தும் பதுக்கிய கோடான கோடி டொலர்களைப் பாதுகாக்கும் உத்திகள் தெ. கொரியாவில் இருப்பதாகத் தெரிகிறது. அந்த ஏற்பாடுகளைக் கவனிக்க மாநாட்டில் கலந்து கொள்ளும் பெயரில் நாட்டைவிட்டுப் பாய்கின்றார். அந்த நாட்டு சிறையில் தள்ளிவிட முடிந்தால் அது இந்த நாட்டு மக்களுக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். அந்த நன்மையான கைங்கரியத்தைச் செய்ய யாரும் முன்வருவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.