Header Ads



புதுப் பொழிவுடன் தம்புள்ள பள்ளிவாசல், இனாமலுவே தேரருக்கும் பாராட்டு


 தம்புள்ள நகரில் முஸ்லிம்கள் தங்களது வணக்க வழிபாடுகளை செய்துவர  விசேடமாக தொழுகை, ஜும்ஆ  கடமைகளுக்காக பல வருட காலம் ஒரு மஸ்ஜித் காணப்பட்டது.


மஸ்ஜித் அருகே  ரங்கிரி ரஜமஹா விகாரை இனாமலுவே தேரர் தலைமையில் இயங்கி வருகிறது.


தம்புள்ள நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதும், முஸ்லிம்களின் பள்ளிவாசலை  வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலையேற்பட்டது. 


ரஜமஹா விகாராதிபதி இனாமலுவே தேரர் நகரில் புதிய பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க உரிய இடமமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலமாக ஏற்பாடு செய்து கொடுத்தார். 


தேரருடைய இச்செயல் அங்கு வாழும் சிங்கள, முஸ்லிம்களிடையே பாராட்டை பெற்றது. 


இதற்காக முஸ்லிம் சமூகமும் தேரருக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.


2012 ஆம் ஆண்டுமுதல் இப்பள்ளிவாசல் எதிர்கொண்ட  சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளமை பாராட்டத்தக்கது. 


அண்மையில் மௌலவி தாஸிம் தலைமையிலான குழுவினரும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து, பள்ளிவாசலை பார்வையிட்டனர். பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். இதன்போது அவர்கள் இனாமலுவே தேரருக்கும் நன்றி தெரிவித்தனர்.




No comments

Powered by Blogger.