இலங்கை வெல்லாது என ஆவலுடன் பார்த்தேன்
முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியதற்கு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நியூஷிலாந்து அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப்போட்டியில் நியூசிலாந்து இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு வருவதற்கான இலங்கையின் நம்பிக்கையை தகர்த்தது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் என்பது இரண்டு வருட நீண்ட நிகழ்வு, அனைத்து அணிகளும் தலா ஆறு டெஸ்ட் தொடர்களை விளையாடுகின்றன. எனவே மற்ற அணிகளை சார்ந்து இருப்பது இயற்கையானது.
இலங்கை அணி இந்தப்போட்டியில் வெல்லாது என்று தாம் ஆவலுடன் பார்த்துக் கொண்டிந்ததாக இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் குறிப்பிட்டுள்ளார்.
அணிகள் சிறப்பாக விளையாடவேண்டும் எனினும் இது போன்ற போட்டிகளில் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலை உள்ளது. மற்றும் நியூசிலாந்து அணி போட்டியை சமநிலையில் முடிக்காமல் வெற்றி பெறவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டதாகவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையேயான உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது இந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Post a Comment