காட்டுக்குள் கொட்டப்பட்டுள்ள ஒரு இலட்சம் முட்டைகள்
பழுதடைந்தவையென சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் கொண்டு வரப்பட்டு மஹகும்புக்கடை வல்பலுவ வனப் பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதேசிவாசி ஒருவர் தமது அலுவலகத்துக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து இதனைக் கண்டுபிடித்ததாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பக்கம் மிகவும் பாடுபட்டு கடும்உழைப்பு மூலம் கிடைத்த இலட்சக்கணக்கான முட்டைகளை பேராசை காரணமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் சம்பாதிக்கும் பேராசையில் பதுக்கிய முட்டைகள் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் பழுதடைந்துவிடும். அதை கொண்டு போய் படுகுழியில் கொட்டிவிட்டு கடைசியில் மூலதனமும் இல்லை. இலாபமும் இல்லை. மறுபக்கம் மகோடிஸ்மார்கள் கோடிக்கணக்கான கொமிஸ் அடித்துக் கொண்டு முட்டி மோதி அதிக விலை காரணமாக பொதுமக்கள் முட்டை வாங்க வசதியில்லாமல் பாதிக்கப்பட்ட போர்வையில் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்து மக்களின் நன்மை என்ற பெயரில் இந்தியாவில் 3 - 4 ரூபாவுக்கு விற்கப்படும் முட்டையை இறக்குமதி செய்து 40-45 ரூபாவுக்கு விற்பனை செய்து கோடான கோடி கொமிஸ் அடிக்கத் திட்டமிடுகின்றனர். இது போன்ற தீர்மானம் எடுக்க ஒரு நாளைக்கு பொதுமக்களின் பணத்தில் 90 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து கொமிஸ் பெறுவதற்குத் திட்டமிடுகின்றார்கள். உலகில் ஈடு இணையற்ற அரசாங்கம்.
ReplyDelete