Header Ads



"மக்கள் அனைவரும் தற்போது ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர்"


ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், அடுத்த ஆட்சி ரணில் அரசின் தலைமையிலேயே அமையும்."


இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.


"லீகுவான் சிங்கப்பூரை மாற்றியமைத்தார், மலேசியாவை மகாதீர் முகமது வளர்ச்சி காண வைத்தார், பின்னர் மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.


தனிநபர்களாலும் ஒரு நாட்டை கட்டி எழுப்ப முடியும் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டியிருக்கின்றனர்.


அதேபோல் தற்போது மக்கள் அனைவரும் அதிபர் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர், ஆகவே அடுத்த புதிய ஆட்சி ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமையும் என்பது உறுதி." இவ்வாறு அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாட்டின் ஏக தலைவராக ரணில் இந்த நாட்டின் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சென்ற அரசாங்கத்தில் மிகவும் மோசமான முறையில் பொதுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களால் விரட்டி ஒதுக்கப்பட்ட இந்த நபர் உண்மையில் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டுச்சட்டம் அதற்கு இடம்தருவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.