சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்த சிரியாவைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அந்த சிறுவன், ரொனால்டோவை கட்டியணைத்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினார்.
அவரது எண்ணப்படியே அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் ரொனால்டோ.
ரொனால்டோவின் இந்த முடிவை நாம் மனதார மதிக்கின்றோம். அவரைப் பாராட்டுகின்றோம். அந்த சிறுவர்களைக் கட்டியணைப்பதற்கு மேல் லட்சக்கணக்கான சிறுவர்கள்,தாய்மார்கள், பெண்கள் யுத்தத்தாலும் அண்மைய புவிநடுக்கத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உறங்குவதற்கு வீடின்றி, பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீதியிலும் தெருவோரங்களிலும் படுத்துறங்குகின்றனர். அவர்களின் அவல நிலைமைகளைப்போக்க ரொனால்டோ அந்த மக்களுக்கு உதவினால் அல்லல்படும் மனிதர்களுக்கு அவர் செய்த பெரும்சேவையும் வரலாற்றில் பதிவாகும். அவர்களின் துன்பங்களைத் துடைக்க ஆற்றிய பங்கை இறைவனும் பாராட்டுவான். அது உங்கள் வாழ்க்ைகயை மட்டுமன்றி உங்கள் குடும்ப வாழ்க்ைகயையும் சிறப்பாக்க பல வழிகளிலும் உதவும். அந்த பேருதவியைச் செய்ய ரொனால்டோ முன்வருவாரா?
ReplyDelete