யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் புதிய மேயர், அதிவிசேட வர்த்தமானி வௌியீடு
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ். மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம், எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி யாழ். மாநகர சபை மேயராக முன்னாள் மேயர் இம்மானுவல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment