Header Ads



உசேன் போலுடன் ஒடும், ஜனாதிபதி ரணில்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பவர் உலகத்திற்கு முன்னால் நாட்டை முன்நோக்கி கொண்டு வரும் அரசியல் களத்தில் திறமையான வீரர் எனவும் அவரை உலக தடகள வீரர் ஹூசைன் போலுடன் மாத்திரமே ஒப்பிட முடியும் எனவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் நாட்டு மக்கள் உணரக்கூடிய அளவில் குறைக்கப்பட உள்ளது என்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்.


அதேபோல் எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் காஞ்சன விஜேசேகர திறந்த சந்தையை ஏற்படுத்த எடுத்த தீர்மானம் மிக சரியான தீர்மானம்.


போட்டியான சந்தை இல்லாததன் காரணமாகவே எமக்கு எப்போதும் பாதிப்பாக அமைந்தது.


சந்தை என்பது எப்போதும் போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும்.அரசாங்கம் வர்த்தகத்தில் இருந்து விலக வேண்டும்.


தற்போது இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் மாத்திரமே எரிபொருளை விநியோகித்து வருகிறது.


எதிர்காலத்தில் மேலும் மூன்று நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுவதன் மூலம் போட்டியான சந்தை உருவாகும் எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.