உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரராக, பதிவாகிய ஷகிப் அல் ஹசன்
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 7000 ஓட்டங்களையும் மற்றும் 300 விக்கெட்களையும் வீழ்த்திய உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரராக பங்களாதேஷின் சகல துறை வீரர் ஷகிப் அல் ஹசன் பதிவாகியுள்ளார்.
அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த போட்டியில் 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களைப் பெற்று ஷகிப் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
மேலும், ஷகிப் அல் ஹசன் 300 விக்கெட்களை கடந்து பங்களாதேஷ் அணியின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டின் சகல துறை வீரர்களுக்கான தரப்படுத்திலும் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளமை குறிபிடத்தக்கது.
Post a Comment