சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு, ஊர் மக்கள் எச்சரிக்கை
இரவு வேளையில் வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ஒற்றைச்சக்கரத்தில் வாகனங்களை செலுத்தி சாகசம் காட்டிய இளைஞர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காலி பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் தொடர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதன்போது ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் எச்சரிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த இளைஞர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை அவர்கள் மிரட்டும் காணொளியும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இளைஞர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment