Header Ads



இலங்கையில் இடி அமீன் ஆட்சி - ரவி குமுதேஸ்


நாட்டில் இடி அமீன் ஆட்சி நிலவுவது போன்ற உணர்வு தோன்றுவதாக சுகாதார ஊழியர்கள் சம்ளேனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


நாங்கள் இன்று காலை அனைத்து மருத்துவமனை பணியாளர்கள், அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் மத்திய நிலையத்திற்கு உரித்தான தொழிற்சங்கங்கள் அனைத்தையும் சேவைக்கு அழைத்துள்ளோம். குறிப்பாக நாங்கள் அரசாங்கத்திற்கு ஒரு சமிஞ்ஞையை வழங்குவதற்கே முயற்சி செய்தோம். 24 மணித்தியால போராட்டமாகவே நாங்கள் அதைனை முன்னெடுத்தோம். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கும் முகமாக இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.


அத்துடன் ஓய்வு பெற்ற சில தொழிற்சங்க தலைவர்களின் பிழையான கருத்து வெளியீடுகளை சரிப்படுத்தும் நோக்கில் நாங்கள் எங்களின் விளக்கத்தை வழங்கியுள்ளோம். இந்தநிலையில் இன்றைய தினத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. நாட்டில் பணிபுரியும் வர்த்தகத்தினரை அடக்க முயற்சிக்கும் தரப்பினருக்கு எங்களின் எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் விடுக்கும் முகமாக மாத்திரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அன்றி பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்தும் நோக்கம் இல்லை.


அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பேச்சில் அதனை உறுதிப்படுத்த முனைகிறார்கள். அதுமட்டுமன்றி ஒரு சிலர் மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இயங்கும் விதம் உண்மையில் வெட்கக் கேடாக இருக்கின்றது.


ஆனால் பொதுமக்கள் உண்மை நிலைமையை தற்போது உணர்ந்து விட்டார்கள். இடி அமீனின் ஆட்சியில் இடம்பெற்றது போன்ற அடக்கும் முறைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.