புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது - முஸ்லிம் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு
அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விடவும் மிகவும் ஆபத்தானது என பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் என்பனவும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்றோர் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர முயற்சிப்பது அவசியமற்றதாகும். சாதாரண சட்டக்கோவையிலே திருத்தங்களைக் கொண்டுவரலாம்.
1978 முதல் அமுலிலிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் மூலம் அப்பாவிகளும் எதுவும் அறியாத நிலையில் அகப்பட்டவர்களுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான பயங்கரவாதிகள் தப்பித்துக் கொண்டுள்ளார்கள். எனவே சாதாரண சட்டமே எமக்குப்போதும். புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தேவையற்றதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; அரசியல் நோக்கத்துக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளும் எதிர்பார்ப்பிலுமே இச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இச்சட்டம் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிகாரிகளின் கீழ் பலத்தை கொடுப்பதாக அமைந்துள்ளதுடன் அசாதாரண அதிகாரங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அமையவுள்ளது. எமது நாட்டிலுள்ள குற்றவியல் தண்டனை சட்டக்கோவை 100 வருடங்கள் பழைமையானதாகும் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பில் யாழில் நடத்திய ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
“பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது.இது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாகக் கொண்டுவரப்பட்டு சில வருடங்களுக்குப் பிறகு 1981 ம் ஆண்டு நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக தற்போதைய ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அத்துடன், ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதற்குப் பின்னர் தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றிப் பயங்கரவாத தடுப்புசட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அது மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன” என சுமந்திரன் எம்.பி. கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணி
அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணி ஊடகப்பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களுக்கு விரோதமானது. ஏனெனில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பில் இலத்திரனியல் ஊடகங்களில் அல்லது வேறு ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்துவதும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயலாகும்.
அதன் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் ஒன்று தொடர்பாக கையேடு விநியோகித்தல், டுவிட்டர் தகவல் அனுப்புதல் வட்ஸ் அப் தகவல் அனுப்புதல் பயங்கரவாத செயலாகவே அதன் சடடமூலத்தின் 118ஆவது சரத்தில் அதுதொடர்பான விதிகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது. இருப்பினும் அதன் உள்ளடக்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது. இருப்பினும் அதன் உள்ளடக்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் காணப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிவரும் நிலையில், இதுகுறித்துத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.- Vidivelli
Post a Comment