Header Ads



ரூபா வீழ்ச்சி, டொலர் கூடியது (இன்றைய நாளின் முழு விபரம் உள்ளே)


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.


இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல் | Dollar Rate In Sri Lanka


பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, நேற்றுடன் ஒப்பிடும் போது, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும்  சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.


இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

No comments

Powered by Blogger.