மக்கள் சேவகம் புரிந்த நிலாமின், விற்பனை நிலையத்திற்கு விஷமிகள் தீ வைப்பு
யாழ் மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான கே.எம் நியாஸ் (நிலாம்) அவர்களின், யாழ் மானிப்பாய் வீதியில் இருக்கும் 'பழைய வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை' நிலையம் இன்று (2023.03.18) அதிகாலை 4.30 மணியளவில் தீ மூட்டப்பட்டுள்ளது.
அதன் காரணத்தால் பெறுமதி வாய்ந்த வாகன உதிரிப் பாகங்கள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.
மேற்படி யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு வந்ததன் பின்னரும் தனிப்பட்ட முறையிலான அவரது தனிப்பட்ட உதவி சேவை களுடன், யாழ் மாநகர சபை ஊடான பல்வேறு அபிவிருத்தி சேவைகளையும் அவரது வட்டார மக்களுக்கு வழங்கி நல்லதோர் மதிப்பினை மக்கள் பத்தியிலும் அரசியல் தலைமைப்பீடங்களிலும் பெற்றிருந்தார்.
அவரது வளர்ச்சியை விரும்பாத விஷமிகளே இவ்வாரான நாசகார செயலை திட்டமிட்டு செய்திருக்கின்றார்கள் என்று பலராலும் பேசப்படுகின்றது.
Sunees Suresh
Post a Comment