Header Ads



இலங்கை மீது பணத்தை வீசினால்..?


பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும் இலங்கை ஒரு கடினமான பாதையை கடக்க வேண்டியுள்ளதாக மூடிஸ் எனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ் பொருளாதார நிபுணர் ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார் . 


மூடிஸ் எனலைட்டிக்ஸ் , மதிப்பீடு முகவரகமானது , மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையிலிருந்து சுயாதீனமானதாகும் . 


சர்வதேச நாணய நிதியம் ( IMF ) நேற்று இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கு அனுமதி அளித்தது . இந்த திட்டமானது 7 பில்லியன் டொலர்களை ஒட்டுமொத்த நிதியுதவியாக அணுக உதவும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது . 


மூடிஸ் எனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறுகையில் , " 


சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பானது வெளித்தோற்றத்தில் மாயாஜாலம் காட்டும் வெள்ளித் தோட்டாவாக ( Silver bullet ) இருக்காது . 


அரசாங்கத்திடமிருந்தும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காணாத வரையில் நிதிச் சந்தைகளில் வெளிப்படும் உற்சாகம் உண்மையில் மங்கியிருக்கும் . 


எதிர்வரும் மாதங்களில் நாடு பெறும் அனைத்து மேலதிக நிதிகளும் நல்ல செய்திகளே , ஆனால் நிதி விவேகம் மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக இருக்கும் " என்று பொருளாதார நிபுணர் கூறினார் . 


" இலங்கை மீது எவ்வளவு சாத்தியமான நிதி அல்லது ஆதரவு வீசப்பட்டாலும் அது இன்னும் கடினமான பாதையாகவே இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் " என்று கத்ரீனா எல் கூறினார் .

1 comment:

  1. இந்த பொருளாதார நிபுணர் இலங்கை ஐஎம்எப் இடமிருந்து பெற்றுக் கொள்ளவிருக்கும் 3 பில்லியனோ அல்லது 7 பில்லியன் டொலர்களோ நிச்சியமாக இலங்கைக்கு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரமாட்டாது. மக்கள் வாழ்க்கையை இன்னும் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனக்கூறும் கருத்து மிகவும் பாரதூரமானது. அதனை இலகு மொழியில் கூறினால் உலகில் எந்தவொரு பிச்சைக்காரனும் மற்றவர்கள் கொடுக்கும் பிச்சையைப் பெற்று பணக்காரனாக மாறிய வரலாறு உலகில் எங்கும் இல்லை. இலங்கையின் பாராளுமன்றமும் அரசாங்கமும் அங்குள்ள மகோடிஸ்களுக்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது எப்படி என்பதை கலந்தாலோசிக்கவும் இருப்பினை ஸ்திரப்படுத்துவதற்கான திட்டங்களையும் அதற்குச் சார்பான சட்டங்களையும் இயற்றுவதும் அவற்றை நிறைவேற்றுவதும் தான் அவர்களின் தலையாய கடமையாகவும் பொருப்பாகவும் செயல்படுக்கின்றனர். அரச சேவை என்பது மிகவும் படுமோசமான நிலையில் பொதுமக்களுக்கு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரச காரியாலங்களுக்குச் சென்றால் இலஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. இனி இந்த கள்ளக்கூட்டம் கொள்ளைக்காரர்களின் கையில் அரச பணம் கிடைத்தால் அவர்கள் பொதுமக்கள் சார்ந்த எந்த பணிகளையும் செய்யமாட்டார்கள். எனவே வௌியிலிருந்து வரும் கோடிக்கணக்கான டொலர்களும் பாராளுமன்றத்தில் உள்ள மகோடிஸ்மார்களுக்கும் அரச சேவையிலுள்ள கள்ளக் கூட்டத்துக்கும் வந்த பணமாக கருதிக் கொண்டு செயல்பட்டால் இந்த நாட்டு மக்களுககு அதனால் நிச்சியம் ஒரு பயனும் ஏற்படாது. இறுதியாக அடுப்பங்கல்லில் இருக்கும் மக்களை அந்த டொலர்கள் அடுப்புக்குள் தள்ளிவிட்ட கதையாகத் தான் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.