Header Ads



உலகிலேயே பின்லாந்தினர் அதிக, மகிழ்ச்சியை அனுபவிக்க காரணம் என்ன..?


பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக இந்த பெருமையைப் பெறுகிறது.

பின்லாந்து, டென்மார்க், நார்வே உள்ளிட்ட வடக்கு முனையில் உள்ள நாடுகள் மிகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றன.


பின்லாந்து மக்கள் தொகை சுமார் 55.4 இலட்சம் தான்.   கடும் குளிர், ஆண்டின் பெரும்பாலான நாட்கள் இருளாகவே இருக்கும் இந்த நாடுகள் எப்படி மகிழ்ச்சியான நாடாக திகழ்கின்றன என்ற கேள்வி நமக்கு எழலாம்.


மழை, பனி, குளிர் காற்று எதுவும் பின்லாந்து மக்கள் ஆக்டிவாக இருப்பதைத் தடுப்பது இல்லை என்பது தான் இதற்கு பதில்.


மகிழ்ச்சியான நாடு என்பது அங்குள்ள இடங்கள், காலநிலை பற்றியது மட்டுமல்ல. மகிழ்ச்சியான நாடு என்பது மக்களின் மனநிலையே!


சைக்கிள் ஓட்டுதல், கயாக்கிங், ஹைகிங், காம்பிங் என பின்லாந்து மக்கள் கோடைக்காலம் முழுவதும் தங்களை பிஸியான சாகசக்காரர்களாக வைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்லாந்தை விட சிறந்த காலநிலையை கொண்ட பல நாடுகள் இருக்கின்றன, பணக்கார நாடுகள் பல இருக்கின்றன, மக்கள் தொகை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள நாடுகள் பல இருக்கின்றன. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இருக்கின்றதுப் என்பதைக் காணலாம்.


உலகின் அழகான இடங்களின் பட்டியலில் பின்லாந்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும் என்பது உறுதி. ஏனெனில் அங்கு பல பழமையான காடுகள், பளிங்கு போல தெளிவான ஏரிகள், வன விலங்குகள் இருக்கின்றன.


காற்றிலும் நீரிலும் மாசு மிகக் குறைவு. இதுவே மனதளவில் மக்களை ஃப்ரெஷாக வைத்திருக்கும்.


இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கைவளங்கள் சூழ்ந்த பகுதியிலேயே வசிக்க விரும்புகின்றனர். வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை, இதுவும் மகிழ்ச்சிக்கான இரகசியங்களில் ஒன்று.


மிகவும் சுதந்திரமான மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். இறுக்கமான சட்டங்கள் இல்லை என்றாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது பின்லாந்து.


பின்லாந்து கலாச்சாரம் மற்றொரு காரணம். மக்கள் போட்டிப்போடுவதை விட ஒன்றாக இணைந்து செயல்படுவதே ஊக்குவிக்கப்படுகிறது.


பின்லாந்து மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அங்கு குற்றங்கள் மிகக் குறைவு என்பதுதான்.


மேலும் பின்லாந்தின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறை மற்றோரு காரணம்.


பின்லாந்தின் பள்ளி அமைப்பு ஐரோப்பியாவில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.


மேலும் பின்லாந்தில் சிறந்த மருத்துவ அமைப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து இங்குள்ள மக்கள் உயர்தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது.


பின்லாந்து மக்கள் மகிழ்ச்சிக்கான மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஏற்றதாழ்வுகள் இல்லாமை தான்.


வேற்றுமைகளைக் கடந்து சமத்துவத்தை முன்னிருத்தும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான உதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.


சமூகத்தின் எந்த பொருளாதார பின்னணியில் இருந்து வருபவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.


இங்கு அதிகமாக மிடில் கிளாஸ் மக்கள் இருக்கின்றனர். ஏழைகள் குறைவுதான். பின்லாந்தில் உள்ள பணக்காரர்கள் தங்களது செல்வ வளத்தை வெளிக்காட்ட கூச்சப்படுபவர்களாக இருக்கின்றனர்.


ஆடம்பரமான கார்கள், உடைகள் வாங்கும் பழக்கம் அங்கு பெரும்பாலனவர்களுக்கு இல்லை. ஏழைகளாக இருப்பவருக்கும் நல்ல கல்வியும், மருத்துவமும் கிடைக்கும். வீடில்லாமல் இருப்பவர்கள் யாருமில்லை.

நேரடியாக இந்த காரணிகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தாது. ஆனால் இவற்றின் மூலம் மக்கள் நிதானமாகவும் முழுமையாகவும் உணர்கின்றனர். இதுவே சமூகமாக அவர்களை மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது.

1 comment:

  1. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டில் மஹிந்த, ரணில் உற்பட பந்துல போன்றோரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே அங்குள்ள மக்களிடம் பொய்யையும் புரட்டையும் ,பயத்தையும், எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் இந்த சைத்தான்களின் குடும்பங்கள் இல்லாமையால் அந்த மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.