Header Ads



சாதனையை முறியடித்த பாபர் ஆஸம்


டி20 கிரிக்கெட்டில் 9000 ஓட்டங்களை விரைவாக எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் கிறிஸ் கெயில். 249 இன்னிங்ஸில் அவர் 9000 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.

இந்நிலையில் அதை விடவும் குறைவான இன்னிங்ஸில் 9000 ஓட்டங்களைக் கடந்து கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் தலைவர் பாபர் ஆஸம்.


பிஎஸ்எல் போட்டியில் பெஷாவர் அணியின் தலைவரான பாபர் ஆஸம், 39 பந்துகளில் 64 எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.


இதன்மூலம் 245 இன்னிங்ஸில் 9000 டி20 ஓட்டங்களைக் கடந்த பாபர் ஆஸம், பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் விராட் கோலி, 271 இன்னிங்ஸில் 9000 ஓட்டங்களை எடுத்து 3 ஆம் இடத்தில் உள்ளார்.


குறைந்த இன்னிங்ஸில் 9000 டி20 ஓட்டங்கள்

பாபர் ஆஸம் – 245 இன்னிங்ஸ்

கிறிஸ் கெயில் – 249 இன்னிங்ஸ்

கோலி – 271 இன்னிங்ஸ்

No comments

Powered by Blogger.