சூரிய சக்தியில் இயங்கும், பேருந்துகளை இயக்க தீர்மானம்
முன்னோடித் திட்டமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சு இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது.
இதன்படி கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து குறித்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொது - தனியார் கூட்டுத் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.
Post a Comment