Header Ads



கடனட்டை திருடியவர் கூறிய, அதி விசித்திர காரணம்


விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்த சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.


சிங்கள விளையாட்டுக் கழகத்தின் மதுபானக் கடையில் பணியாளராகப் பணியாற்றிய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் உதயகுமார என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.


“எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்” எனக் கூறி குறித்த கிரீமை கொள்வனவு செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவித்துள்ளார்.


முறைப்பாட்டாளர் கிளப்பிற்கு வந்து பரிவர்த்தனை செய்து விட்டு வெளியேறிய போது, ​​அவரது கிரெடிட் கார்ட் தொலைந்து போனதாகவும், சந்தேகநபர் அதனை பயன்படுத்தி குறித்த கிரீமை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.